The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe family of Imran [Aal-e-Imran] - Tamil Translation - Omar Sharif - Abridged Version - Ayah 7
Surah The family of Imran [Aal-e-Imran] Ayah 200 Location Madanah Number 3
هُوَ ٱلَّذِيٓ أَنزَلَ عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ مِنۡهُ ءَايَٰتٞ مُّحۡكَمَٰتٌ هُنَّ أُمُّ ٱلۡكِتَٰبِ وَأُخَرُ مُتَشَٰبِهَٰتٞۖ فَأَمَّا ٱلَّذِينَ فِي قُلُوبِهِمۡ زَيۡغٞ فَيَتَّبِعُونَ مَا تَشَٰبَهَ مِنۡهُ ٱبۡتِغَآءَ ٱلۡفِتۡنَةِ وَٱبۡتِغَآءَ تَأۡوِيلِهِۦۖ وَمَا يَعۡلَمُ تَأۡوِيلَهُۥٓ إِلَّا ٱللَّهُۗ وَٱلرَّٰسِخُونَ فِي ٱلۡعِلۡمِ يَقُولُونَ ءَامَنَّا بِهِۦ كُلّٞ مِّنۡ عِندِ رَبِّنَاۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ [٧]
(நபியே!) அவன்தான் (இவ்)வேதத்தை உம்மீது இறக்கியவன். அதில் பொருள் தெளிவான (முஹ்கம்) வசனங்கள் உள்ளன. அவைதான் வேதத்தின் அடிப்படையாகும். இன்னும், பொருள் தெரியமுடியாத வேறு (முதஷாபிஹ் வசனங்களு)ம் உள்ளன. ஆக, தங்கள் உள்ளங்களில் கோணல், (சந்தேகம்) உள்ளவர்கள் குழப்பத்தை தேடியும் (மறைக்கப்பட்ட) அதன் விளக்கத்தை தேடியும் அதில் பொருள் தெரிய(முடியாதவற்றைப் பின்பற்றுகிறார்கள். அதன் விளக்கத்தை அல்லாஹ்வைத் தவிர (யாரும்) அறியமாட்டார். கல்வியில் தேர்ச்சியடைந்தவர்கள் "அதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (முஹ்கம், முதஷாபிஹ்) எல்லாம் எங்கள் இறைவனிடமிருந்துதான் (இறக்கப்பட்டவை" எனக் கூறுவார்கள். அறிவுடையவர்களைத் தவிர (மற்றவர்) நல்லறிவு பெறமாட்டார்.

