The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe victory [Al-Fath] - Tamil Translation - Omar Sharif - Abridged Version - Ayah 29
Surah The victory [Al-Fath] Ayah 29 Location Madanah Number 48
مُّحَمَّدٞ رَّسُولُ ٱللَّهِۚ وَٱلَّذِينَ مَعَهُۥٓ أَشِدَّآءُ عَلَى ٱلۡكُفَّارِ رُحَمَآءُ بَيۡنَهُمۡۖ تَرَىٰهُمۡ رُكَّعٗا سُجَّدٗا يَبۡتَغُونَ فَضۡلٗا مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٗاۖ سِيمَاهُمۡ فِي وُجُوهِهِم مِّنۡ أَثَرِ ٱلسُّجُودِۚ ذَٰلِكَ مَثَلُهُمۡ فِي ٱلتَّوۡرَىٰةِۚ وَمَثَلُهُمۡ فِي ٱلۡإِنجِيلِ كَزَرۡعٍ أَخۡرَجَ شَطۡـَٔهُۥ فَـَٔازَرَهُۥ فَٱسۡتَغۡلَظَ فَٱسۡتَوَىٰ عَلَىٰ سُوقِهِۦ يُعۡجِبُ ٱلزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ ٱلۡكُفَّارَۗ وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ مِنۡهُم مَّغۡفِرَةٗ وَأَجۡرًا عَظِيمَۢا [٢٩]
முஹம்மது அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். அவருடன் இருக்கின்றவர்கள் நிராகரிப்பாளர்கள் மீது கடினமானவர்கள், தங்களுக்கு மத்தியில் கருணையாளர்கள் ஆவர். (தொழுகையில்) ருகூஃ செய்தவர்களாக சுஜூது செய்தவர்களாக அவர்களை நீர் காண்பீர். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் பொருத்தத்தையும் விரும்புகிறார்கள். அவர்களின் தோற்றம் அவர்களின் முகங்களில் சுஜூ(து- சிரம் பணிந்து வணங்குவ)தின் அடையாளமாக இருக்கும். இது தவ்ராத்தில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாகும். இன்ஜீலில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாவது, (நெல், கோதுமை போன்ற) ஒரு விளைச்சலைப் போலாகும். அது (-அந்த விளைச்சல்) தனது (செடியின்) காம்பை வெளியாக்கியது. இன்னும் அதைப் பலப்படுத்தியது. பிறகு அது தடிப்பமாக ஆனது. தனது தண்டின் மீது அது உயர்ந்து நின்று, விவசாயிகளை கவர்கிறது. (இப்படித்தான் நம்பிக்கையாளர்களை அல்லாஹ் ஓங்கி உயரச் செய்வான்,) அவர்கள் மூலமாக நிராகரிப்பாளர்களை அவன் ரோஷமூட்டுவதற்காக. அவர்களில் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களுக்கு அல்லாஹ் (தனது) மன்னிப்பையும் மகத்தான கூலியையும் வாக்களித்துள்ளான்.

